``மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதில் சொல்ல முடியாது" - நாஞ்சில் சம்பத் கலாய்! | Nanjil Sampath slams Tamilisai Soundrrajan

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:07:52 (31/12/2018)

``மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதில் சொல்ல முடியாது" - நாஞ்சில் சம்பத் கலாய்!

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று தமிழிசை செளந்தரராஜன் கருத்துக்கு நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

நாஞ்சில் சம்பத்

கோவை போத்தனூர் பகுதியில், நாஞ்சில் சம்பத் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கட்சி அரசியலில் இருந்து விலகி விட்டாலும், தத்துவ அரசியலில் இருந்து விலகவில்லை. பெரியார், அண்ணா லட்சியங்கள் வெல்ல வேண்டுமென விரும்புகிறேன். நாட்டை தரைமட்டமாக்கிய மத்திய மோடி அரசைத் தூக்கி எறிய வேண்டியது அவசியம். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த எதாவது ஒரு மேடையில் பிரசாரம் செய்வேன். அ.தி.மு.க  பா.ஜ.கவிடம் அடிமையாக இருக்கிறது.

சம்பத்

தி.மு.க-வுடன் இணைய வாய்ப்பில்லை. தி.மு.க வெல்ல வேண்டுமென விரும்புகிறேன். 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெல்லும். அ.ம.மு.க-வில் ஜனநாயகம் இல்லை. அந்தக் கட்சி வளர்ச்சியை நோக்கிச் செல்லாது” என்றவரிடம் தமிழகத்தில் தாமரையை மலர வைப்போம் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து குறித்த கேள்விக்கு, ``மனநலம் பாதித்தவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.