`ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட வாலிபர் மரணத்தில் மர்மம்?’ - பெற்றோர்கள் கோரிக்கை | HIV patient death today in kamuthi

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (30/12/2018)

கடைசி தொடர்பு:07:56 (31/12/2018)

`ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட வாலிபர் மரணத்தில் மர்மம்?’ - பெற்றோர்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்ட சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள், சாத்தூர் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை தானம் வழங்கிய கமுதியைச் சேர்ந்த  வாலிபர் கடந்த சில நாள்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற நிலையில், மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

எச்.ஐ.வி

மதுரை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சையும், பல்வேறு சோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு அவருக்கு உடல் நிலை மிகவும் மோசமாகியது. இந்த நிலையில் இன்று காலை அவர் இறந்தார். ``சிகிச்சையிலிருந்த தங்கள் மகன் திடீரென்று மரணமடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் சந்தேகத்தை அரசு தீர்க்க வேண்டும்.பிரேதப் பரிசோதனையை இங்குள்ள மருத்துவர்கள் செய்யக் கூடாது. வேறு மருத்துவமனை மருத்துவர்களை வைத்து பண்ண வேண்டும்" என்று ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்திடம் அவரின் பெற்றோர்கள் மனு அளித்தனர். இவர்களின் கோரிக்கை ஏற்கப்பட வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே, தங்களுக்கு நியாயம் கேட்டு மரணமடைந்த வாலிபரின் குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க