வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (30/12/2018)

கடைசி தொடர்பு:08:15 (31/12/2018)

`ஒரு நாளைக்கு ஒரு வீடு தான் சார்’ - போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பலே திருடன்

காரைக்குடியில் குண்டு ஊசி, மளிகை சாமான்கள் திருடிய திருடன் ஒரு வருடத்துக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை முதல் வீதியில் வசிப்பவர் பாலமுருகன். இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு வெளியூர் சென்றுவிட்டார். நேற்று இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடன் பீரோவை உடைத்திருக்கிறான். அப்போது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற காவல் துறையினர் வீட்டினுள் மறைந்திருத்த திருடனைப் பிடித்தனர்.

தொடர் விசாரனையில் ஒரு வருடத்துக்கு மேலாக காரைக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டு ஆள் இல்லாத வீடுகளாக பார்த்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் ஒரு நாளைக்கு ஒரு வீடு மட்டுமே கதவை உடைத்து திருடுவதாக வாக்குமூலம் கொடுத்த திருடனிடம் மேலும் விசாரணை நடத்தியதில் வீட்டில்  கிடைக்கும் குண்டு ஊசி முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்து பொருள்களையும் எடுத்துச் சென்று விடுவேன் அளவாக மட்டுமே திருடுவேன். இன்று ஏற்கெனவே ஒரு வீடு உடைத்து திருடினேன். பேராசையால் இந்த வீட்டில் ஏதாவது பெரிதாக இருக்கும் என்று வீட்டின் கதவை உடைத்து திருடியபோது மாட்டிக் கொண்டேன் என்று தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆனந்தன்  கரூரைச் சேர்ந்தவர். இவர் காரைக்குடி பர்மா காலனி பகுதியில் வீடு எடுத்து குடும்பத்தோடு தங்கியிருந்து  இந்தத் திருட்டுத் தொழிலைச் செய்து வந்துள்ளார். ஒரு வருடத்துக்கு மேலாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆனந்தனிடமிருந்து தங்கம், வெள்ளி, செல்போன், கைக்கடிகாரம், மளிகைச் சாமான் என ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பொருள்கள் மீட்டு காரைக்குடி வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆனந்தனை கைது செய்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க