`சசிகலா குடும்பம் சாப்பிட்டதால்தான் ரூ.1 கோடிக்கு மேல் பில்’ - அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி | minister jayakumar slams sasikala family

வெளியிடப்பட்ட நேரம்: 16:07 (31/12/2018)

கடைசி தொடர்பு:16:12 (31/12/2018)

`சசிகலா குடும்பம் சாப்பிட்டதால்தான் ரூ.1 கோடிக்கு மேல் பில்’ - அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி

அப்போலோவில் சசிகலா குடும்பத்தினர் சாப்பிட்டதால்தான் ஒருகோடிக்கு மேல் பில் வந்தது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

ஜெயலலிதா

விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ``மருத்துவர்கள் கூறியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்படவில்லை. ஆனால், அதைச் செய்யவிடாமல் தடுத்தது யார்? ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டாம் எனச் சொன்னது யார்? மத்திய அரசு ஜெயலலிதாவுக்குத் தனி விமானம் தருகிறோம். அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க முழு வசதிகளையும் செய்து தருகிறோம் என்றது. அதைத் தடுத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பு குறைந்துவிடும் எனச் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் உயிரைவிட, இந்திய மருத்துவர்களின் கௌரவம் முக்கியம் என்ற ராதாகிருஷ்ணனின் பின்னணியை அறிய வேண்டும்.

சி.வி.சண்முகம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், ``ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைச்சர் சி.வி.சண்முகம் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று கூறியதும்,  சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் குறித்து கூறியதும் வரவேற்கத்தக்கது. சி.வி.சண்முகம் என்ன நினைத்து கருத்து சொன்னாரோ தெரியவில்லை. ஆனால், அவரது கருத்தையும் கவனத்தில் கொண்டு ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க வேண்டும்.

ஜெயக்குமார்

அனைவரது கருத்தையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்கும். அமைச்சர்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை பிளவு ஏற்படுத்தவும் முடியாது. அப்போலோ மருத்துவமனையில் லட்சக்கணக்கில் ஜெயலலிதா சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தினரால் தான் ரூ.1 கோடிக்கு மேல் பில் வந்தது. அமைச்சர்களோ எம்.எல்.ஏ-க்களோ, எம்.பி-க்களோ யாரும் மருத்துவமனையில் தங்கவில்லை. சசிகலா குடும்பம் பல அறைகளை வாடகைக்கு எடுத்துச் சாப்பிட்டதற்குதான் ஒன்றரை கோடி செலவு ஆனது" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க