வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (31/12/2018)

'இது ஃபேமிலிக்கான டைம்!' - 'அண்ணியார்' ரேகா குமார் ஷேரிங்க்ஸ்

'தெய்வமகள்' சீரியலில் 'அண்ணியார்' கதாபாத்திரத்தின்மூலம் நம்மை ஈர்த்தவர், ரேகா குமார். இவர் நடித்த 'காயத்ரி' கதாபாத்திரத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். 'தெய்வமகள்' சீரியலுக்குப் பின்னர், 'நந்தினி' சீரியலில் நடித்தார். தற்போது 'நந்தினி' சீரியல் முடிவடைந்த நிலையில், 'அடுத்து என்ன ப்ளான் மேம்?' என்று அவரைத் தொடர்புகொண்டோம். 

'தெய்வமகள்' ரேகா குமார்

'' 'தெய்வமகள்' சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைச்சது. இப்பவும் பொது இடங்களில் என்னை 'காயத்ரி'யாகத்தான் பார்க்குறாங்க. அந்த சீரியல் முடிஞ்சதும் குடும்பத்தைப் பிரிஞ்ச உணர்வு இருந்துச்சு. தொடர்ந்து சன் டிவி-யிலேயே 'நந்தினி' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. இப்போ அந்த சீரியலும் முடிஞ்சிடுச்சு. ஒரு ரெண்டு மாசம் பிரேக் எடுக்கலாம்னு இருக்கேன். இது ஃபேமிலிக்கான டைம்.

பெங்களூரில் என் குடும்பத்தோடு புத்தாண்டைக் கொண்டாடிட்டு இருக்கேன். இந்தப் புத்தாண்டு எல்லோருக்கும் நல்லபடியா அமைய என் வாழ்த்துகள்! மறுபடி தமிழில் நல்ல வாய்ப்பு கிடைச்சா மீண்டும் உங்க எல்லோரையும் சந்திக்க ஆவலா காத்திருக்கேன். சீக்கிரமே சந்திப்போம்'' என்று புன்னகைக்கிறார், ரேகா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க