வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (31/12/2018)

‘மின்சாரம் இல்லாமல் இருளில் தவிக்கிறோம்!’ - சிம்னி விளக்கு ஏந்தி அனுமந்தக்குடி கிராம மக்கள் போராட்டம்!

மின்சாரம் கேட்டு ஒரு கிராம மக்கள், சிம்னிவிளக்கு ஏந்தி நூதனமுறையில்  மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடத்திய போராட்டம் அனைவரையும் ஈர்த்தது.

போராட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தக்குடி, இஸ்திரிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த  மக்கள், தங்கள் கிராமத்தில் மின்மாற்றி அமைத்துத் தரக் கோரி, கையில் சிம்னிவிளக்கேந்தி வந்து நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அனுமந்தங்குடி, இஸ்திரிக்கோட்டை, செட்டியேந்தல் மற்றும் ஆலங்குடி ஆகிய கிராமங்களில் மின்மாற்றி பழுதடைந்ததால், கடந்த ஓராண்டாக மின்சாரம் இல்லாமலும், குடிதண்ணீர் இல்லாமலும் பல்வேறு சிரமங்களுக்கு மக்கள் உள்ளாகிவருகின்றனர். மேலும் போதிய மின்வசதி இல்லாததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இரவில் குழந்தைகள் படிக்கமுடியாமல் கஷ்டப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், மின்மாற்றியை மாற்றி புதிய மின்மாற்றி அமைத்துக்கொடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் தங்களது கைகளில் சிம்னிவிளக்கு ஏந்தி வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க