நிலத்தை அபகரித்த தி.மு.க பிரமுகர்கள் - கருணைக் கொலைக்கு அனுமதி கேட்கும் கோவை முதியவர் | land acquisition case in coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/01/2019)

கடைசி தொடர்பு:06:00 (01/01/2019)

நிலத்தை அபகரித்த தி.மு.க பிரமுகர்கள் - கருணைக் கொலைக்கு அனுமதி கேட்கும் கோவை முதியவர்

கோவை சூலூர் வட்டம் அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (70). தன்னுடைய பூர்விக சொத்தை போலியான ஆவணங்கள் மூலம் தி.மு.க பிரமுகர்கள் அபகரித்ததாகவும், இதனால் தன்னை கருணைக் கொலை செய்யப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கந்தசாமி

இதுதொடர்பாக கந்தசாமி, “அரசூர் கிராமத்தில் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் சொந்தமாக 3 ஏக்கர் மதிப்பில் விவசாய பூமி உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ஐந்து கோடி ரூபாய். இந்நிலையில், கரையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் சன் ராஜேந்திரன் மற்றும் சிக்கதாசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அருண்குமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் எனது சொத்தை அபகரித்துவிட்டனர்.

இதற்கு எதிராக பத்து ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையில் போராடியும் என்னால், எனது பூர்விக சொத்தை மீட்க முடியில்லை. இதனால், தற்போது மிகவும் கடன்பட்டு வாழவே முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன்.  வயதாகிவிட்டதாலும், வசதி இல்லாததாலும் என்னால் நீதிமன்றத்தில் வழக்கு நடத்த முடியவில்லை.

கந்தசாமி

எனவே, குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை கருணைக் கொலை செய்ய வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், எனது உடலைக் கோவை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கவும் சம்மதம் தெரிவிக்கிறேன்” என்றார்.