சிவகங்கை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம் - மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! | One person dies near Sivagangai beacuse of electric shock

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (01/01/2019)

கடைசி தொடர்பு:08:00 (01/01/2019)

சிவகங்கை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம் - மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

வேனில் ஆடுகளை ஏற்றும்போது மின்சார கம்பி உரசியதில் ஒருவர் பலி;  மூவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலியானவர்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சரக்கு வேனில் ஆடுகளை ஏற்றும் போது மின்சாரக் கம்பியில் உரசியதில் ஒருவர் பலியான நிலையில் 3 பேர் சிவகங்கை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர். காளையார்கோவிலை அடுத்துள்ள ராதானூர் பகுதியில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ஆட்டு மந்தையை இடமாற்றம் செய்ய காரைக்குடியை சேர்ந்த சம்பத் என்பவர் தனது லோடு வேனில் சென்றுள்ளார். 

அச்சமயம் ஆடுகளை ஏற்ற சாலையின் ஓரமாக இருந்த பள்ளத்தில் சம்பத் தனது லோடு வேனை  இறக்கி நிறுத்திய நிலையில் சுப்பிரமணியின் மகன் வெங்கடேஷ் மனைவி லெட்சுமி இருவரும் மேலே ஆடுகளை ஏற்றியுள்ளனர். அச்சமயம் மேலே இருந்த ஆடுகள் அடைக்கும் பெட்டியை கீழே இறக்க வெங்கடேஷ் முயன்றபோது பெட்டியானது அருகே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது. இதில் வெங்கடேஷ் மீது மின்சாரம் பாயவே அவரை காப்பாற்ற ஓட்டுநர் சம்பத், சுப்பிரமணியின் மனைவி லெட்சுமி மற்றும் கிளினர் முருகன் ஆகியோர் முயன்றுள்ளனர். இதில் அனைவரும் மீதும் மேலும். படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரையும் மீட்டு கிராம மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் வரும் வழியிலேயே ஓட்டுனர் சம்பத் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெங்கடேஷ், லெட்சுமி, முருகன் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆடுகள் ஏற்ற செல்லும்போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகி 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க