வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (01/01/2019)

கடைசி தொடர்பு:15:26 (01/01/2019)

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

மதுரை காமராசர் பலகலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இவர், இதற்கு முன்பு திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழகத்தில் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். 

துணை வேந்தர் நியமனம்
 

கடந்த சில வருடங்களாக சர்ச்சையும் சச்சரவும் மிகுந்த மதுரை காமராசர் பல்கலைகழகத்தில், துணைவேந்தராக இருந்த கல்யாணிமதிவாணன், செல்லத்துரை இருவர் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அரசியல் செல்வாக்கால் தகுதியானவர்களைப் புறம்தள்ளி பொறுப்புக்கு வந்ததாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்தன. அவ்வழக்குகளால்  தகுதிநீக்கம் செய்யப்பட்டு, அப்பீல் செய்து மீண்டும் பொறுப்பில் தொடர்ந்து, ஓய்வுபெற்றுச் சென்றார் கல்யாணி மதிவாணன். செல்லத்துரையோ, பணியில் இருக்கும்போதே நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படாமல்  நாள்கள் போய்க்கொண்டிருந்தது. 

காமராசர்
   

இந்த நிலையில், துணைவேந்தரைத் தேர்வுசெய்ய, தேடல் குழு நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.  முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உட்பட 196 பேர் விண்ணப்பித்தனர். அதிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட 10 பேரில், இறுதியாக 3 பேரை தேர்வுசெய்து ஆளுநருக்கு அனுப்பினார்கள். அவர்களில் ஒருவரான டாக்டர் கிருஷ்ணனைப் புதிய துணைவேந்தராக நியமித்து, ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த கல்வியாளரான டாக்டர் கிருஷ்ணன், entomology -யில் நிபுணத்துவம் பெற்றவர். திருச்சி பாரதிதாசன் பல்கலையில் துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். பல சர்வதேச நாட்டு பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்பித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க