கடலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் - ரூ.1 லட்சம் பறிமுதல்! | Vigilance officers raid in Cuddalore registration department

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (01/01/2019)

கடைசி தொடர்பு:12:55 (01/01/2019)

கடலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் - ரூ.1 லட்சம் பறிமுதல்!

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில், மாவட்ட பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு, இணைப் பதிவாளர் அலுவலகம் 1 மற்றும் அலுவலகம் 2 ஆகியவை இயங்கிவருகிறது. இங்கு பத்திரப்பதிவு, திருமணப்பதிவு, நிறுவனங்கள் பதிவு உள்ளிட்டவை  செய்யப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு, பரிசுப் பொருள்களாகப் பணம், தங்கம் வழங்கப்படுவதாகக் கடலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசார்

இதையடுத்து, இரவு கடலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், திருவேங்கிடம், மாலா ஆகியோர் தலைமையில் 10 காவலர்கள் கொண்ட தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, அலுவலகத்தில்  இருந்தவர்களை வெளியே அனுமதிக்காமலும், வெளியில் இருந்தவர்களை உள்ளே அனுமதிக்காமலும் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை சோதனை நடந்தது. அப்போது, ரூ. 1 லட்சத்திற்கு அதிகமான கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. மேலும், பதிவுத்துறை  அலுவலர்கள் மட்டுமில்லாது, அங்கிருந்த நில விற்பனைத் தரகர்களிடமும் கணக்கில் வராத பணம்குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், கடலூர் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.