அணைக்கட்டு திட்டத்தைச் செயல்படுத்துங்கள்! - நடைப்பயணம்மேற்கொண்ட விவசாயிகள் | peraiyur farmers holds protest

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (01/01/2019)

கடைசி தொடர்பு:16:30 (01/01/2019)

அணைக்கட்டு திட்டத்தைச் செயல்படுத்துங்கள்! - நடைப்பயணம்மேற்கொண்ட விவசாயிகள்

கொஞ்ச நஞ்சம் நடந்துகொண்டிருக்கிற விவசாயத்தைக் காப்பாற்ற, கிடப்பில் கிடக்கும்  அணைக்கட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துங்கள் என்ற கோரிக்கையோடு, மதுரை மாவட்டம் பேரையூர் வட்டார விவசாயிகள் பரப்புரை நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்கள். 

அணைக்கட்டு


  பேரையூர், சேடப்பட்டி, கல்லுப்பட்டி வட்டார விவசாயிகள் நலனுக்காக மேற்குத்தொடர்ச்சி மலை  அடிவாரத்தை ஒட்டியுள்ள டி.கிருஷ்ணாபுரத்தில், டேராபாறை அணைக்கட்டு கட்டும் திட்டம்,  1984-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின், அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலை அருகில் இருக்கும் பெரும்பாலான பகுதிகள் விவசாயத்தில் செழிப்பாக இருக்கும்போது, இப்பகுதி மட்டும்  தண்ணீர் வசதியில்லாமல் வானம் பார்த்த பூமி போல ஆனது. அதிலும், பேரையூர் வட்டாரம் சமீபகாலமாக சரியான மழைப்பொழிவு இல்லாததால், கண்மாய்கள் வறண்டு, கடும் வறட்சியுடன் காணப்படுகிறது. ஒரு காலத்தில் சிறப்பான முறையில் விவசாயம் நடைபெற்ற பகுதி.

இந்த நிலையில்தான் கிடப்பிலுள்ள டேராபாறை அணைக்கட்டு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டுமென்று இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறர்கள். சில மாதங்களுக்கு முன் மதுரை மாவட்ட நிர்வாகம், அணைக்கட்டும் திட்டம் பற்றி நேரில் பார்வையிட்டு, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில்தான், பேரையூர் வட்ட விவசாயிகள் சங்கத்தினர் இந்த அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்றக் கோரி நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இதைப் பற்றி கிராம மக்களிடம் பரப்புரையும் செய்துவருகின்றனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க