வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (01/01/2019)

கடைசி தொடர்பு:08:31 (02/01/2019)

வினையான புத்தாண்டுக் கொண்டாட்டம்! - போலீஸ் உதவி கமிஷனர் மீது பீர் பாட்டில் வீசிய கோவை இளைஞர்

கோவை அவினாசி சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, காவல் உதவி ஆணையாளர்மீது பீர் பாட்டிலை வீசிய சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற இளைஞரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவையில், ஆங்கிலப் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கோவை - அவினாசி சாலையில் குவிந்த இளைஞர்கள், புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். அப்போது, அத்துமீறலில் ஈடுபட்ட வாகனங்களில் வந்த இளைஞர்களை காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனிடையே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆணையாளர் சுந்தர்ராஜன் மீது ஒரு இளைஞர் பீர் பாட்டிலை தூக்கி வீசினார். இதில், அதிர்ஷ்டவசமாக சுந்தர்ராஜனுக்கு காயம் ஏற்படவில்லை. இதையடுத்து, தப்பி ஒட முயன்ற அந்த இளைஞரை காவலர்கள் துரத்திப்பிடித்து அடித்தனர். அந்த இளைஞரிடம் காவலர்கள் விசாரணை நடத்தியதில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பது தெரியவந்தது. காளீஸ்வரனை பந்தயச்சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க