வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (02/01/2019)

கடைசி தொடர்பு:07:31 (02/01/2019)

`நாங்க இனிமே குடிக்க மாட்டோம்" - புத்தாண்டில் காவல்துறையினரிடம் சத்தியம் செய்த `குடிமகன்கள்'

இந்தாண்டு முதல் இனி மது அருந்த மாட்டோம் என குமாரபாளையம் காவல்துறையினர் சார்பில் அப்பகுதி குடிமகன்களிடம் சத்தியம் வாங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்று சத்தியம் செய்தனர். 

குடிமகன்கள்

ஆண்டுதோறும் புத்தாண்டு நாள் அல்லது அதற்கு முந்தைய நாளன்று இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாண்டுக்கான உறுதி மொழி ஏற்பது வழக்கம். அதை பின்பற்றுவது இரண்டாவது பட்சம் எனினும், தவறாமல் உறுதிமொழி ஏற்பர். அந்தவகையில் 2019-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று இரவு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் காவல்துறை சார்பில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றது.

அப்போது இந்த ஆண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மது அருந்தக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று விழிப்பு உணர்வு செய்யப்பட்டது. அப்போது, இந்தப் புத்தாண்டு முதல் மது அருந்தக் கூடாது என்று மது அருந்துவோரிடம் குமாரபாளையம் காவல் துறையினர் சத்தியம் வாங்கும் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வு  அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க