நீலகிரியில் கடும் பனிப் பொழிவு- 5 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை பதிவு | Frost in nilgiris

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (02/01/2019)

கடைசி தொடர்பு:10:30 (02/01/2019)

நீலகிரியில் கடும் பனிப் பொழிவு- 5 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை பதிவு

நீலகிரியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது

நீலகிரி

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இரண்டாவது நாளாக கடும் பனி  நிலவி வருகிறது. இதன் காரணமாக  தாழ்வான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தாவரவியல் பூங்காவின் புல்வெளிகள் உறைபனி காரணமாக வெண்ணிறமாக காட்சியளிக்கிறது.
 

புல்வெளி

புறநகர் பகுதிகளான பட் பயர், இந்து நகர், தலைக் குந்தா  பாலாடா, சோலூர், தும்மனாடா உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கேரட் உள்ளிட்ட காய்கறிகள் பனிப் பொழிவுக்கு ஆளாகி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக விளைச்சல் பாதிக்கப்படும் என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், புறநகர்  பகுகளான இந்து நகர், பட் பயர், தலைக் குந்தா பகுதிகளில் இதைவிடக் குறைவாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பனிப் பொழிவு காரணமாக காலை, மாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க