வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (02/01/2019)

கடைசி தொடர்பு:20:50 (02/01/2019)

நீலகிரி மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர்

பவானிசாகர், அவினாசி, மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள் ஊட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்படும். இந்த மையத்தை இன்று தேர்தல் அலுவலரும் நீலகிரி கலெக்டருமான  இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தார். மாவட்டப் போலீஸ் எஸ்.பி சண்முகப் பிரியா, துணைத் தேர்தல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த ஆய்வின்போது வாக்கு எண்ணக்கை மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். 

``நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 13,36,484 வாக்காளர்கள் உள்ளார்கள். இவர்கள் எளிமையாக வாக்களிக்க 1,413 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு ஏற்பாடுகள் குறித்து இரண்டு வாரத்துக்கு ஒரு முறை தேர்தல் ஆணையம் ஆலோசனைகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க