வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (02/01/2019)

கடைசி தொடர்பு:20:32 (02/01/2019)

``3 மாதமாகத் தேடுகிறோம்; இன்றுதான் க்ளூ கிடைத்தது” -ஹரிணியின் தந்தைக்கு நம்பிக்கை அளித்த லதா ரஜினிகாந்த்

காணாமல்போன நாடோடி சமூகத் தம்பதியின் பெண் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இறங்கியுள்ளார்.

குழந்தை ஹரிணி

காஞ்சிபுரம் மானாமதியில், அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரண்டு வயதுக் குழந்தையைத் தாெலைத்துவிட்டு தவிக்கிறது வெங்கடேசன், காளியம்மாள் என்ற நாடாேடி இன தம்பதி. 96  நாள்களைக் கடந்தும் குழந்தை கிடைக்காமல் அல்லாடிவருகிறார்கள். 'குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டாேம்" என்றபடி அங்கேயே இருக்கிறார்கள். காஞ்சிபுரம் காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடிவருகிறது. இந்நிலையில், ஒன்பது மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் காளியம்மாள், சரியாகச் சாப்பிடாமலும் மனஉளைச்சலில் இருந்ததாலும், சீரியஸான நிலைக்குப் பாேய் சிகிச்சையளிக்கப்பட்டார். 

நரிக்குறவர் தம்பதி

இதைப் பற்றிய செய்திகளை அறிந்த லதா ரஜினிகாந்த், வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தியிருக்கிறார். தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும், மும்பையில் ஹரிணி பாேல ஒரு குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மும்பையில் பிரபல ஆர்ட்டிஸ்ட் மூலமாக அந்த கமிஷனரிடம் பேசி, ஹரிணியை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக்கெண்டிருப்பதாகத் தெரிவித்தார். இதனால், வெங்டேசனுக்கு புது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 

லதா ரஜினிகாந்த்

ஹரிணியின் தந்தையிடம் பேசிய லதா ரஜினிகாந்த், ``ஜோகிந்தர் ரயில் நிலையத்தில் உங்கள் குழந்தை இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது. மும்பையில் பிரபல ஆர்ட்டிஸ்ட் மூலமாக அந்தப் பகுதி கமிஷனரிடம் பேசிவிட்டேன். அவருக்கு, குழந்தை குறித்த தகவல்களைத் தெரிவித்துவிட்டேன். அவரும் ஆள் அனுப்பியிருக்கிறார். உங்களுக்குத் தெரியாமலே, கடந்த மூன்று மாதமாக ஹரிணியைத் தேடிவருகிறோம். சத்தமில்லாமல் காணாமல் போன ஆயிரக்கணக்கான குழந்தைகளைத் தேடிவருகிறோம். இன்றைக்குத் தான் உங்கள் குழந்தை பற்றிய க்ளூ கிடைத்தது. உங்கள் குழந்தை கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க