கடலூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்! | People Demonstrate for basic facilities near Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (03/01/2019)

கடைசி தொடர்பு:07:28 (03/01/2019)

கடலூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்!

கடலூர் நகரில் குண்டும், குழியுமான சாலைகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தராததைக் கண்டித்து அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தலைமை தபால் அலுவலகம் அருகில் நடந்தது.

ஆர்பாட்டம்.

கடலூர் நகரில் முக்கிய சாலைகளான நேதாஜி சாலை, பாரதி சாலை, இம்பிரியல் சாலை, கம்மியம்பேட்டை இணைப்பு சாலை, சாவடி சாலை என நகரில் முக்கிய சாலைகள் எல்லாம் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது.  இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் நகராட்சிப் பகுதி மற்றும் ஊராட்சிப் பகுதி எனக் கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நகரில் இந்த அவல நிலையைக் கண்டித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படுவில்லை எனில் அடுத்தகட்டமாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.