`ஆணையத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது; ஆனால்..?’ அப்போலோ வழக்கறிஞர் பேட்டி! | all files related to jayalalitha death submitted to arumugasamy commission

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (03/01/2019)

கடைசி தொடர்பு:16:55 (03/01/2019)

`ஆணையத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது; ஆனால்..?’ அப்போலோ வழக்கறிஞர் பேட்டி!

அப்போலோ மருத்துவமனைக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என மருத்துவமனை நிர்வாக வழக்கறிஞர் புகார் கூறியுள்ளார். 

அப்போலோ

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா ஆஜரானார். பின்னர் சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 21 மருத்துவர்கள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பான முழுவிவரங்களையும் அனைத்து வகையான மருத்துவ ஆவணங்களும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மஹிபுனா பாட்ஷா

ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ கிராம் சிகிச்சை தேவைப்பட்டதா இல்லையா என்பதை மருத்துவ ஆவணங்கள் மூலமே தெரிந்துகொள்ளலாம். ஆனால், அந்த விவரங்கள் குறித்து மருத்துவம் குறித்த தெளிவு இல்லாதவர்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதனால்தான் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்த வாக்குமூலங்கள் தவறாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சை குறித்தும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. அப்போலோ மருத்துவமனைக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.

அப்போலோ வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா

ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர்கள் அளிக்கும் வாக்குமூலத்துக்கும், அது பதிவு செய்யப்படுவதில் உள்ள வேறுபாடுகளைக் களைய வேண்டும். இதைச் செயல்படுத்த விசாரணை ஆணையத்தில் 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை. மற்றபடி, ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி வாக்குமூலங்கள் தவறாகப் பதிவு செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க