வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:08:00 (04/01/2019)

`புத்தாண்டில் பிறந்த 27 குழந்தைகள்’ - வேலூர் அரசு மருத்துவமனையில் கொண்டாட்டம்

புத்தாண்டு நாளில், வேலூர் அரசு மருத்துவமனையில் 27 குழந்தைகள் பிறந்தன. 

 மருத்துவமனை - 27 குழந்தைகள்

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆங்கிலப் புத்தாண்டு தொடக்கமான 31-ம் தேதி நள்ளிரவு 12.01 முதல் 1-ம் தேதி நள்ளிரவு 12.58 மணி வரை மொத்தம் 27 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், சுகப்பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள் மற்றும் 12 பெண் குழந்தைகளும் என மொத்தம் 18 குழந்தைகளும், சிசேரியன் முறையில் 4 ஆண் குழந்தைகள் மற்றும் 5 பெண் குழந்தைகளும் என மொத்தம் 9 குழந்தைகளும் பிறந்தன.

புத்தாண்டில் பூத்த இந்த 27 மலர்களுக்கும், அவர்களின் தாய்மார்களுக்கும், மருத்துவக் கல்லூரி டீன் சாந்தி மலர், மகப்பேறு துறைத்தலைவர் வினிதா பத்மினி, டாக்டர் அருமைகண்ணு, நர்சிங் கண்காணிப்பாளர் ஷீலா வசந்தி, அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ராஜவேலு ஆகியோர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த 27 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவக் கல்லூரி டீன் சாந்தி மலர் தெரிவித்தார்.