`தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கியதில்லை!' - நாம் தமிழர் கட்சி புகார் | kaja cyclone relief fund contribution for central government

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (04/01/2019)

கடைசி தொடர்பு:12:35 (04/01/2019)

`தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கியதில்லை!' - நாம் தமிழர் கட்சி புகார்

கஜா புயல் நிவாரணத்துக்கு 15,000 கோடி நிதி உதவி தேவை என்று தமிழக அரசு கேட்டதற்கு மிகத் தாமதமாக 1,146 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி, அதைப் பெருமையாகக் கூறிக்கொண்டிருக்கிறது. கஜா புயல், தமிழகத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திச்சென்றுள்ள நிலையில், இந்த நிதி எந்தளவுக்குப் போதும் என்று தெரியவில்லை. இக்கட்டான காலங்களில் தமிழக அரசு கேட்கும் எந்த நிதியையும் மத்திய அரசு முழுமையாக இதுவரை வழங்கியதில்லை.

கஜா
 

யானைப் பசிக்குச் சோளப்பொறி அளவுக்குத்தான் நிதி அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அனைவரும் வைத்து வருகிறார்கள். அதை ஆதாரபூர்வமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுள்ளார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ராஜு. அவர் கூறும்போது, ``புயல், வெள்ளம் பேரிடர் மற்றும் பெரும் வறட்சி காலங்களில் தமிழக அரசு கேட்கிற நிதி உதவியை மத்திய அரசு வழங்குவதில்லை. மற்ற மாநிலங்களுக்கு ஒரு மாதிரியும், நம்மை ஒரு மாதிரியுமாக அணுகுகிறது. இப்போதுகூட கஜா புயல் நிவாரணத்துக்கு மிகத் தாமதமாக குறைந்த அளவிலான நிதியை வழங்கியுள்ளது. இப்போது மட்டும் அல்ல, எப்போதுமே இப்படித்தான் என்பதைக் கடந்த 2010 முதல் இப்போது வரை வழங்கப்பட்டுள்ள நிதியைப் பற்றித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலே ஆதாரமாக உள்ளது. 

தமிழக அரசு


2010-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சேதத்துக்குக் கோரப்பட்ட தொகை 1929.21 கோடி, விடுவிக்கப்பட்ட தொகை 317.17 கோடி. 2011-ல் தானே புயல் நிவாரணத்துக்குக் கோரப்பட்ட தொகை 52248.80. விடுவிக்கப்பட்ட தொகை 638.137. 2013-ல் வறட்சி பாதிப்புக்காக மத்திய அரசிடம் கோரப்பட்டது 19,665 கோடி, விடுவிக்கப்பட்டது 524.69 கோடி. 2015-ல் வெள்ளச்சேதம் தொடர்பாகக் கோரப்பட்டது 25.912.44  கோடி, விடுவிக்கப்பட்டது 1365.67 கோடி. 2016-ல் வர்தா புயல் நிவாரணத்துக்காகக் கோரப்பட்டது  22.573.26 கோடி, விடுவிக்கப்பட்டது 218.76 கோடி  2017-ல் வறட்சி நிவாரணத்துக்குக் கோரப்பட்டது 39.565 கோடி விடுவிக்கப்பட்டது 1447.99 கோடி. 2017-ல் ஒகி புயல் நிவாரணத்துக்காகக் கோரப்பட்டது 9302 கோடி. விடுவிக்கப்பட்டது 133 கோடி என்று தெரிவித்துள்ளார்கள். 2018-ல் கஜா புயலுக்கு 15,000 கோடி கேட்டிருந்த நிலையில், 1146 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இது முதல் கட்டம் என்று கூறப்பட்டாலும், இது மிகவும் குறைவு. அடுத்தகட்ட நிதி எப்போது ஒதுக்குவார்கள் என்பதும் தெரியவில்லை'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க