வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (04/01/2019)

கடைசி தொடர்பு:18:35 (04/01/2019)

விடுமுறையில் காய்கறி விற்பனை! - தேசிய கராத்தே சாம்பியனான கல்லூரி மாணவி

அரியலூர் சந்தையில் காய்கறி விற்கும் மாணவி, கராத்தே போட்டியில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். 

                                                   


அரியலூரைச் சேர்ந்தவர், மாணவி சுகந்தி. இவர், அங்குள்ள அரசுக் கல்லூரியில் சுற்றுச்சூழல் பட்டப்படிப்பு படித்துவருகிறார். விடுமுறை நாளான ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரியலூரில் நடைபெறும் சந்தையில் காய்கறி விற்பனை செய்துவருகிறார். இவர், கடந்த சில மாதங்களாக கராத்தே பயிற்சிபெற்றுவருகிறார்.

                                                    தேசிய கராத்தே சாம்பியனான கல்லூரி மாணவி

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் பாண்டிச்சேரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டார்.  இதில் டேக்வாண்டோ பிரிவில் பாக்ஸிங் பிரிவில் முதல் பரிசு பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். இதையடுத்து, சாம்பியன் பட்டம் பெற்ற சுகந்திக்கு அவருடன் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கிப் பாராட்டினர்.

                                              

இதுகுறித்து மாணவி சுகந்தி பேசும்போது, ”பிக் பாஸ் இன் பிரிவில் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதையடுத்து, ஜப்பானில் நடைபெறும் உலக கிக்பாக்ஸிங் சாம்பியன் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளேன். அதற்கான பயிற்சிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். ஜப்பான் செல்வதற்கான செலவுகளை பாண்டிச்சேரி அரசே ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளது. நடைபெறும் உலக கிக்பாக்ஸிங் பிரிவில் முதல் பரிசு பெற்று இந்தியாவுக்குப் பெருமைசேர்ப்பேன்'' என்றார் மகிழ்ச்சியுடன்.