வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (04/01/2019)

தமிழில் பெயர்ப் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்! - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலான வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில், நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழிலும் அதற்கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் இடம் பெறுமாறு அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

பெயர்ப் பலகை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிளம்பர பெயர்ப் பலகையில் உள்ள தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி ஆகியவை முறையே,  5:3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும்போது முறையே 5:3 என்ற விகிதத்தில் எழுத்துகளின் அளவு இருக்க வேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசாணையின்படி, தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் ஆணையிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, நீதிமன்ற ஆணைகளின்படி வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெயர்ப் பலகைகள் உரிய முறையில் உள்ளனவா என தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். விதிமுறைப்படி பெயர்ப்பலகை அமைத்திடாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தமிழ் வளர்ச்சிக்காக வணிகர்களும், நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும் விதமாக, உடனடியாக பெயர்ப்பலகையை தமிழில் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க