`மதுரை நார் தொழிற்சாலையால் அவதிப்படுகிறோம்' - விவசாயி வேதனை! | Farmers complaint for pollution water spoiling Agriculture Land

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (05/01/2019)

கடைசி தொடர்பு:07:43 (05/01/2019)

`மதுரை நார் தொழிற்சாலையால் அவதிப்படுகிறோம்' - விவசாயி வேதனை!

நார் தொழிற்சாலை கழிவு நீரால் விவசாயமும், உடல் நலமும்  பாதிக்கப்படுவதாக மதுரை மாவட்டம்  வாடிப்பட்டிப் பகுதி மக்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.

விவசாயி ஜெகரட்சகன்

1891-ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சிறுமலையிலிருந்து வரும் மழை நீர், பெரியாறு பாசனக் கால்வாயைக் கடந்து செல்வதற்காக பாலம் கட்டப்பட்டது. இப்போது அந்தப் பாலத்தின் கீழே செல்லும் ஓடையில் அருகிலுள்ள நார் தொழிற்சாலை கழிவு நீர் கலந்து தேங்கி நின்று விவசாயிகளுக்கு பல இன்னல்களைத் தந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கு அருகில்தான் வட்டாட்சியர் அலுவலகம் இருக்கிறது. இதுபற்றி அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் ஜெகரட்சகன் கூறும்போது, ``ஆற்றில் கலக்கும் நார்க்கழிவு நீரால் 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.


கழிவு நீரை சுத்திகரிக்காமல் விடுவதால் உப்பு அதிகமாக கலந்து மண் வளம் பாதிக்கப்படுகிறது. இதனால் விளைச்சல் குறையும். அது மட்டுமில்லாமல், இந்த நீரால் விவசாயிகளுக்கு பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகிறது. அத்தொழிற்சாலை நடத்துவர்களிடமும், இங்குள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்னும் கழிவு நீர் தேங்கி சாக்கடையாக மாறி வருகிறது" என்றார். மதுரை மாவட்ட ஆட்சியர் உடனே இதில் தலையிட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க