மாணவி பாலியல் வன்கொடுமை! - வெளிநாடு தப்பமுயன்ற இளைஞர் ஏர்போட்டில் சிக்கினார் | Man arrested in airport for rape case

வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (05/01/2019)

கடைசி தொடர்பு:11:06 (05/01/2019)

மாணவி பாலியல் வன்கொடுமை! - வெளிநாடு தப்பமுயன்ற இளைஞர் ஏர்போட்டில் சிக்கினார்

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற வாலிபரைச் சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கதிரவன்

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் கதிரவன் (24). இவர் 2017-ம் ஆண்டு வேப்பூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கதிரவன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தகவலறிந்த கதிரவன் அபுதாபிக்கு தப்பிச் சென்றுவிட்டார். உடன் போலீஸார் இது குறித்து அபுதாபி தூதரகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அபுதாபியிலிருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்துள்ளார். உடன்  விமான நிலைய போலீஸார் பிடித்துவைத்து விருத்தாசலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருபாலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா மற்றும் போலீஸார் சென்னை சென்று கதிரவனைப் பிடித்து விருத்தாசலம் கொண்டு வந்தனர். பின்னர் கதிரவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.