வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (05/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (05/01/2019)

`சமூகநீதி நடவடிக்கைகளில் கேரள அரசு முன்னோடி!’ - தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகழாரம்

கேரள அரசுக்கு ஆதரவாக ஜனவரி 11-ல் 'தீண்டாமை ஒழிப்பு முன்னணி  உரிமைச் சங்கமம்'  நடத்த உள்ளதாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு முடிவெடுத்துள்ளது. 

சம்பத், சாமுவேல் ராஜ்

இதுபற்றி மாநிலத் தலைவர் சம்பத், பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறும்போது, ``பட்டியலினத்தவர் உட்பட அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கியது, மலம் அள்ளும் தொழிலில்  இயந்திரங்களைப் பயன்படுத்துவது என சமூக நீதி நடவடிக்கைகளில் தேசத்திற்கே கேரள கம்யூனிஸ்ட் அரசு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இந்த பின்புலத்தில், சபரிமலையில் வழிபட பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் கேரள அரசுக்கு எதிராக சங்பரிவாரம் தொடர் அராஜகத்தில் ஈடுபட்டுவருகிறது. முதலமைச்சர் பினராயி விஜயனை சாதிய ரீதியில் இழிவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் பிற்போக்கு சங்பரிவாரத்தினர் இறங்கியுள்ளது.

வனிதா மதில்

சமூக நீதிக்கான பயணம் கடினமானது. அதை அரசியல் உறுதிப்பாட்டோடு செயல்படுத்திவரும் கேரள அரசுக்கு ஆதரவாக, 'சமூக மறுமலர்ச்சியின் சிகரத்தில் கேரள அரசு... சனாதன வெறியின் உச்சத்தில் சங்பரிவாரம். சமூக நீதி காத்திட, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உரிமைச் சங்கமம், ஜனவரி 11-ம் தேதியன்று கோயம்புத்தூர், விருதுநகரில் நடைபெற உள்ளது. சமூக நீதிப்போரில்  துளியும் சமரசம் இன்றி நெஞ்சுரத்தோடு செயலாற்றிவரும் கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு நமது ஆதரவை தெரிவித்திட, தோழமை அமைப்புகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்த உள்ளோம்'’ எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க