கரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவிகள் வழங்கிய அமைச்சர்! | Minister provided relief assistance for Gaja storm affected peoples in Karur district

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (06/01/2019)

கடைசி தொடர்பு:04:00 (06/01/2019)

கரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவிகள் வழங்கிய அமைச்சர்!

கரூர் மாவட்டத்தில் கஜா புயலால் கடவூர் வட்டத்தில் பயிர் சேதமடைந்து பாதிக்கப்பட்ட 407 பயனாளிகளுக்கு ரூ.16,52,435 மதிப்பிலான நிவாரண உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் .எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

 கஜா நிவாரண உதவிகள் வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்


கஜா புயலால் கடவூர் வட்டத்தில் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவிக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தரகம்பட்டி சக்தி திருமணமண்டபத்தில் இன்று(05.01.2019) நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர;.விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,பயனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.


 கஜா நிவாரண உதவிகள் வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்..

அப்போது அமைச்சர் பேசுகையில், "தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நல்லாசியோடு சிறப்பான ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு, புணரமைப்பு பணிகளும், நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு பொதுமக்கள் வெகுவிரைவாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்கள். கரூர் மாவட்டத்தில், முழுவதும் மற்றும் பகுதியாக சேதமடைந்த 700 வீடுகளின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.71,77,300 மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கடவூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 673 வீடுகளுக்கு ரூ.68,64,600 மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பயிர்சேத பாதிப்புகள் தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கடவூர் வட்டத்திற்குட்பட்ட தோட்டக்கலைப்பயிர்கள் மற்றம் வேளாண்பயிர்கள் பாதிப்படைந்த 407 பயனாளிகளுக்கு ரூ.16,52,435 மதிப்பிலான நிவாரண உதவிகள் பெறுவதற்கான ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகைகள் உங்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்" என்றார்.