`அ.ம.மு.க எங்களுக்குப் பொருட்டே இல்லை' - திண்டுக்கல் சீனிவாசன்! | Dindigul Seenivasan slams ammk

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (06/01/2019)

கடைசி தொடர்பு:13:50 (06/01/2019)

`அ.ம.மு.க எங்களுக்குப் பொருட்டே இல்லை' - திண்டுக்கல் சீனிவாசன்!

அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் தான் பிரச்னை. அ.ம.மு.க எங்களுக்குப் பொருட்டே இல்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாணவர்கள் கலந்துகொண்ட ஸ்கேட்டிங் ஊர்வலம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தைத் துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``திருவாரூர் இடைத்தேர்தலில் 100% அதிமுக வெற்றி பெறும். வெற்றி வாய்ப்பு எங்களுக்குச் சாதகமாக உள்ளது. திருவாரூர் பகுதியில் கஜா புயல் நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்ததால் அ.தி.மு.க வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தலுக்கு  அனைத்து ஆயத்தப் பணிகளையும் அ.தி.மு.க செய்து வருகிறது

திருவாரூரைப் பொருத்தவரை அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் தான் பிரச்னை. அ.ம.மு.க ஒரு பொருட்டே கிடையாது. அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நல்ல வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதற்காக நல்ல வேட்பாளரைத் தேர்வு செய்து வருகிறோம். நாங்கள் ஆளும் கட்சியாக இருப்பதால் அனைத்திற்கும் தயாராக உள்ளோம். இடைத்தேர்தல் தள்ளி போகும் என்பது அனைத்துக் கட்சி சார்பில் ஒரு எதிர்பார்ப்பு. இதைத் தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க