`பிளாஸ்டிக் என்பது அழகானது; விட்டு எறிந்தால் விஷமாவது!’ - கோலப்போட்டியில் அசத்திய விருதுநகர் பெண்கள் | Rangoli competition for women held in Virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (06/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (06/01/2019)

`பிளாஸ்டிக் என்பது அழகானது; விட்டு எறிந்தால் விஷமாவது!’ - கோலப்போட்டியில் அசத்திய விருதுநகர் பெண்கள்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்துக்கு இன்னும் ஒருவாரமே உள்ளது. தைப்பொங்கல் சமயத்தில் பொங்கல் பானை, கரும்புடன் பெண்கள் தங்கள் வீட்டின் முன் வண்ண வண்ண கோலங்கள் இட்டு வீட்டின் வாசலை அழகுபடுத்துவார்கள்.

கோலம்

இந்நிலையில் பெண்களுக்குள் உள்ள கலை திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் விருதுநகர் அரசு அருங்காட்சியகம் மற்றும் விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் விருதுநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தைப்பொங்கல் தின கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் விருதுநகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

கோலம்

பல்வேறு கலைநயங்களுடன் புள்ளிக் கோலம், ரங்கோலி கோலமிட்டு பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, தூய்மை இந்தியா போன்ற கருத்துக்களை மையப்படுத்தியும் அவர்கள் கோலமிட்டனர்.

கோலம்

பெண்கள் வரைந்த அழகான வண்ண கோலங்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர். சிறப்பாக கோலம்போட்ட பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான முறையில் கோலமிட்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோலம்