வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (07/01/2019)

கடைசி தொடர்பு:09:43 (07/01/2019)

`சேலம் ஸ்மார்ட் சிட்டி இப்படித்தான் இருக்கும்’ - சேலம் மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வடிவம்

சேலத்தில் புதிதாக வடிவமைக்கப்பட உள்ள பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாதிரி வடிவங்களை சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்துள்ளனர். 

சேலம் மாதிரிப் படம்

மாதிரி வடிங்களை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்த தமிழ் ஆசிரியர் கோவிந்தனிடம் பேசினோம், ``சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்துசென்று பின்னர் உருவாக்கப்பட்டவையே நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இவை பிரிக்கப்படுவதற்கு முன்னர், சேலம் மாவட்டமே தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாகத் திகழ்ந்தது . படிப்படியாக பெரு வளர்ச்சிகண்ட சேலம் மாவட்டம், தற்போது ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு வளர்ச்சிகண்டுவருகிறது. 

மாதிரி


சில நாள்களுக்கு முன்னர், சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பணிகளுக்காக ரூபாய் 166.52 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா சேலத்தில் நடந்தது. இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிகல் நாட்டினார்.

ஸ்மார்ட் சிட்டி

இதன்கீழ் புதிதாக அமைக்கப்பட உள்ள சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வணிக வளாகம், பெரியார் பேரங்காடி, திறந்தவெளிக் கலையரங்கம் எப்படி அமைக்கப்பட உள்ளது என்பதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.


அங்கிருந்த ஊழியர்களிடம் பேசும்போது, ``தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் இதைப் பார்க்க வருகின்றனர். புதிததாக அமைய உள்ள இந்தத் திட்டங்கள் மட்டுமில்லாமல், சேலம் நகராட்சி முழுவதும் உள்ள  ஸ்மார்ட் சிட்டி மாதிரிகளை ஆவலோடு பார்த்து ரசித்து வருகின்றனர். இளவட்டங்கள், செல்ஃபி எடுத்தும் மகிழ்கின்றனர்’’ என்றனர்.

மாதிரிப் படம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க