பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு! | dmk will win 21 seats in Tamilnadu LS polls, says survey

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (07/01/2019)

கடைசி தொடர்பு:12:00 (07/01/2019)

பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!

ற்போதையை சூழலில் தேர்தல் நடந்தால், பாரதிய ஜனதா கட்சி 257 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று இந்தியா டி.வி.-சின்எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கேரளத்தில், இதுவரை பாரதிய ஜனதா கட்சி பொதுத்தேர்தலில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றியதில்லை. கேரளாவில், முதன்முறையாக ஒரு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெறும் வாய்ப்பு உருவாக்கியுள்ளதாம். 

பொதுதேர்தல் கருத்துக்கணிப்பு

மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத்  தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலில்,  பாரதிய ஜனதா கட்சி, 543 -க்கு  282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. புதிய கணிப்பின்படி, பாரதிய ஜனதா  கட்சி மேலும் 15 சீட்டுகளை இழக்கப்போகிறது.  காங்கிரஸ் கட்சிக் கூட்டணிக்கு 146 சீட்டுகள் கிடைக்கும் (சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் தவிர்த்து)

அடுத்த பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றினால், மாநிலக் கட்சிகள்தான் ஆட்சியமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்குமாம்.. பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு 37.15 சதவிகித ஓட்டுகளும், காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 29.92 சதவிகித ஓட்டுகளும் மற்ற கட்சிகளுக்கு 32.93 சதவிகித ஓட்டுகளும் கிடைக்கும்.

முன்னதாக, கடந்த நவம்பரில் நடந்த கருத்துக்கணிப்பில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 281 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 124 தொகுதிகளையும், மற்ற கட்சிகளுக்கு 138 தொகுதிகளும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.  புதிய கருத்துக்கணிப்பின்படி, பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மக்கள் செல்வாக்கை இழந்துவருகிறது. 

பொதுத்தேர்தல்

தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க 10 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 4 தொகுதிகளையும் கைப்பற்றுமாம். தி.மு.க 21 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3, பா.ம.க 1 தொகுதியிலும் வெற்றிபெறுமாம். கேரளாவில், காங்கிரஸ் 8, இடது சாரிகள் 5 தொகுதிகளில் வெற்றிபெறுவார்கள். கேரளத்தில் முதன்முறையாக, பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதியைக் கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில், பாரதிய ஜனதா 40, சமாஜ்வாடி 20, பகுஜன் சமாஜ் கட்சி 15 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இங்கு 2 தொகுதிகளில்தான் வெற்றி வாய்ப்பு உள்ளதாம். 

54,300 பேரிடம்  1,086 சட்டமன்றத் தொகுதிகளில், தலா 100 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க