வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (07/01/2019)

கடைசி தொடர்பு:16:40 (07/01/2019)

`மணல் கொள்ளையர்கள் மிரட்டுகிறார்கள்!' - கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்

கொள்ளை

மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்றதால் மணல் கொள்ளையர்கள் மிரட்டுவதாக கூறி திருச்சுழி அருகே உள்ள ரெங்கையன்பட்டி கிராம பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக கிராம பொதுமக்கள் கூறுகையில், ``எங்கள் கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளில் அரசு மணல் குவாரி இன்றும், தனியார் நிறுவனங்கள் 3 முறையும் மணல் குவாரி அமைத்து குண்டாற்றிலிருந்து மணல் அள்ளினர். குவாரி அமைத்து ஆற்றில் இருந்து மணல் அள்ளப்பட்டதால் எங்கள் கிராமத்தில் குண்டாற்றின் மூலம் பாசனம் பெற்ற 12 கிணறுகள் வற்றிப்போயின. இதனால் பாசனம் பெற்ற 230 ஏக்கர் விவசாய நிலம் தற்போது பாசனம் செய்யமுடியாத அளவுக்கு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யும் நிலம் தற்போது தரிசாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொள்ளை

எங்கள் கிராமத்தின் அருகே உள்ள ஆழ்துளைக் கிணறு அருகே இன்று மணல் கொள்ளையை தடுக்கச் சென்றோம். ஆனால், பொதுமக்களை மணல் கொள்ளையர்கள் மிரட்டினர். எனவே, எங்கள் பகுதியில் நடைபெற்று வந்த விவசாயத்தை முற்றிலுமாக அழித்த மணல் திருட்டை தடுத்து கிராம பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்தனர்.