வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (08/01/2019)

கடைசி தொடர்பு:08:50 (08/01/2019)

‘ரவுடியிடம் இருந்து என் மகளை மீட்டுக் கொடுங்கள்!’ - போலீஸாரிடம் கெஞ்சிய பெற்றோர்

வேலூரில், பிரபல ரவுடியின் கூட்டாளி ஒருவர், சிறுமியைக் கடத்திச் சென்றுவிட்டதாக, போலீஸில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

வேலூர் கோட்டையின் பின்புறமுள்ள சம்பத் நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி சரஸ்வதி. கூலித் தொழிலாளர்கள். இவர்களது 16 வயது மகள், வேலூர் பழைய மீன் மார்க்கெட் அருகில் உள்ள  துணிக்கடையில் சுமார் மூன்று மாதங்களாக வேலை செய்துவந்தார். கடந்த 2-ம் தேதி காலையில் வழக்கம் போல வேலைக்குச் சென்ற தேவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் பெற்றோர் தேடிப் பார்த்தும், மகளைக் காணவில்லை. உடனடியாக, வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகளில் ஒருவரான ராமு என்பவர், சிறுமி தேவியை கடத்திச்சென்றிருப்பதாக, பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ‘ரவுடியிடம் இருந்து தங்களின் மகளை மீட்டுக் கொடுங்கள்’ என்றுக் கூறி, பெற்றோர் நேற்று  வேலூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி அலுவலகங்களில் புகார் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக போலீஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.