குடிநீரில் மனிதக்கழிவு - அலட்சியம் காட்டும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள்! | Human waste mixing in drinking water

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (08/01/2019)

கடைசி தொடர்பு:09:15 (08/01/2019)

குடிநீரில் மனிதக்கழிவு - அலட்சியம் காட்டும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள்!

குடிநீருக்கு ஆதாரமாக இருக்கும் கண்மாயில் மனித கழிவுகள் கலப்பதால், தொடர்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கண்ணனேந்தல் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பல முறை புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

புகார் அளித்த பொதுமக்கள்

இது தொடர்பாக செல்வம் என்பவர் கூறுகையில், ”மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணனேந்தல் கிராமத்தின் கண்மாயில், சுற்றியுள்ள பகுதிகளின் மனிதக் கழிவுகள் பாதாள சாக்கடை மூலம்வருகிறது. கடந்த 2004ல் கழிவுநீர்க் குழாய் உடைந்து, எங்கள் பகுதியில் குடிநீருக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய கண்மாய் நீரில் கலந்து, மனிதக் கழிவுகள் மிதக்கின்றது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்த் தொற்று ஏற்படுகிறது. அதேபோல, செந்தில் நகர் வழியாகச் செல்லும் ஓடையில் பாதாள சாக்கடை பைப் உடைந்து திறந்தவெளியில் ஆறுபோல ஆங்காங்கே மனிதக்கழிவு கலந்த நீர் தேங்கியுள்ளது. இதனால், டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

புகார் அளித்த பொதுமக்கள்

இந்தப் பிரச்னைகள் தொடர்பாகப் பல முறை மதுரை மாநகராட்சி அலுவலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. பொதுமக்களின் நலன் கருதி அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுத்து, கண்ணனேந்தல் பொதுமக்களின்  நிலையைப் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.