என்.எல்.சி-க்கு ஆதரவாகக் கருத்து! - அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உருவ பொம்மை எரிப்பு | Virudhachalam people burns effigy of Minister MC Sambath

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (08/01/2019)

என்.எல்.சி-க்கு ஆதரவாகக் கருத்து! - அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உருவ பொம்மை எரிப்பு

நிலம் கையகப்படுத்தும் பிரச்னையில் என்.எல்.சி-க்கு ஆதவராகக் கருத்து கூறிய அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உருவ பொம்மை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் அருகே கம்மாபுரத்தில் என்.எல்.சி மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பிரச்னையில் என்.எல்.சி-க்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த அமைச்சர் எம்.சி.சம்பத் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் பகுதியில் என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க 40 கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்தில் இந்த முடிவுக்கு கம்மாபுரம், ஓட்டிமேடு, விளக்கப்பாடி, அகரஆலம்பாடி உட்பட 40 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், கறுப்புக்கொடி
உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், என்.எல்.சி நிறுவனத்துக்கு ஆதரவாகப் பேட்டியளித்ததாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் இந்தப் பேட்டி மேற்கண்ட கிராமங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று கம்மாபுரம்
பகுதியில் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் எம்.சி.சம்பத் உருவ பொம்மையை எரித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்களின் இந்தப் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.