‘ஒரு பிடி நெல்கூட விளைச்சல் இல்லை’- பயீர் காப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல் | Sivagangai Farmers protest For Crop Insurance

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (09/01/2019)

கடைசி தொடர்பு:03:00 (09/01/2019)

‘ஒரு பிடி நெல்கூட விளைச்சல் இல்லை’- பயீர் காப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல்

விவசாயிகள் நூறுசதவீதம் பயிர்காப்பீடு இன்சூரன்ஸ் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டதால் மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பயீர் காப்பீடு

சிவகங்கை மாவட்டம்,காளையார்கோவிலில் 2017-18ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு குறைந்த சதவீதம் இழப்பீடு அறிவித்ததை கண்டித்தும் 100 சதவீதம் இழப்பீடு வழங்கக்கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த சாலை மறியலுக்கு மாநில தலைவர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார்.

போராட்டத்தில் பேசிய குணசேகரன் காளையார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட வன்னிக்குடி, நல்லேந்தல், பால்குளம், சிறகான்பேர், ஒய்யவந்தான் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒருபிடி நெல்கூட விளைச்சல் இல்லை. தனியார் காப்பீடு நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசிக்காமல் 20 சதவீத இழப்பீடு என அறிவித்துள்ளது கண்டனத்துகுரியது எனப் பேசினார்.போராட்டத்தின் போது முடிதானை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி வீரம்மாள் என்பவர் மயக்கமடைந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அஞ்சாம்பட்டியைச் சேர்ந்த இருளாயி மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகுரு, சிவகங்கை துணை கண்காணிப்பாளர் அப்துல்கபூர், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சிவகங்கை கோட்டாட்சியர் தலைமையில் காப்பீடு நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்இதனால் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.அதேபோல் திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இதே பிரச்சக்காக சாலைமறியலில் ஈடுபட்டு கைதாகி விடுதலை செய்யப்பட்டார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க