மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல்: விருதுநகர் மாவட்டத்தில் 1330 பேர் கைது | road rogo against central government : 1330 members arrested in virudhunagar district

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (09/01/2019)

கடைசி தொடர்பு:17:50 (09/01/2019)

மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியல்: விருதுநகர் மாவட்டத்தில் 1330 பேர் கைது

மத்திய அரசைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,330 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மையைப் போக்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 வழங்க வேண்டும். பொதுத்துறை பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கோ, அந்நிய நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சாலை மறியல்

அதன்படி விருதுநகர், சாத்தூர், ஆமத்தூர், வச்சக்காரப்பட்டி, சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தில் 19 இடங்களில் சாலை மறியல் செய்தனர்.

சாலை மறியல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சிறிது நேர போராட்டத்துக்குப் பின் போலீஸார் அவர்களை வேனில் ஏற்றிச் சென்றனர்.

citu

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 610 பெண்கள், 720 ஆண்கள் என மொத்தம் 1,330 பேரை போலீஸார் கைது செய்தனர்.