பொங்கல் பரிசு வாங்க அலைமோதிய கூட்டம் - கோவையில் மயக்கம் போட்ட மூதாட்டிகள்! | Coimbatore: Two old women went sick while getting Pongal gift

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (09/01/2019)

கடைசி தொடர்பு:17:11 (09/01/2019)

பொங்கல் பரிசு வாங்க அலைமோதிய கூட்டம் - கோவையில் மயக்கம் போட்ட மூதாட்டிகள்!

கோவையில் உள்ள ஓர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க வரிசையில் நின்ற இரண்டு மூதாட்டிகள் மயக்கமடைந்தனர். 

பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய் உடன் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ரேஷன் கடைகளில் இதற்காக டோக்கன் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்த கட்டமாக ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக  நீண்ட வரிசையில் மக்கள் நின்று தங்கள் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் பகுதியில் இன்று, பொங்கல் பரிசு வாங்குவதற்காக வரிசையில் நின்ற தங்கமணி மற்றும் வனஜா ஆகிய  இரண்டு மூதாட்டிகள் மயங்கி விழுந்தனர்.

மூதாட்டிகள் மயக்கம்

இதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரும், பொதுமக்களும் மயங்கி விழுந்த மூதாட்டிகளுக்குத் தண்ணீர் கொடுத்து அவர்களை ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.