மின்னல் வேகத்தில் வந்த பைக்! - பறிபோன மாணவர்களின் உயிர் | two student died in accident

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (10/01/2019)

கடைசி தொடர்பு:12:40 (10/01/2019)

மின்னல் வேகத்தில் வந்த பைக்! - பறிபோன மாணவர்களின் உயிர்

ன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே, இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற  பாலிடெக்னிக் மாணவர்கள், காம்பவுண்டு சுவரில் மோதியதில்  பலியான சம்பவம் நடந்துள்ளது.

விபத்தில் பலியான மாணவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பரமன்விளையைச் சேர்ந்தவர்கள் சரவணன் (19), சுஜின் (19) மற்றும் அஜில் (20). இவர்கள், தனியார் பாலிடெக்னிகில் படித்துவந்தார்கள். இந்த மூன்றுபேரும் ஒரு பைக்கில் நேற்று இரவு வேகமாகச் சென்றுள்ளனர். இருசக்கர வாகனம் கணபதிபுரம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக அங்குள்ள காம்பவுண்டு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சரவணன், சுஜின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலியான மாணவர்கள்

அஜில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில், மாணவர்கள் சென்ற இருசக்கர வாகனம் நொறுங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில், ராஜாக்கமங்கலம் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். சுவரில் பைக் மோதிய சம்பவத்தில், பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டுபேர் இறந்த சம்பவம் ராஜாக்கமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.