வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (10/01/2019)

கடைசி தொடர்பு:13:50 (10/01/2019)

இருக்கைகள் 400; டிக்கெட்டோ 450 !‍- `விஸ்வாசம்' போலி டிக்கெட்டால் பதறிய தியேட்டர் நிர்வாகம்

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள `விஸ்வாசம்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் இந்த படத்தைப் பற்றிய செய்திகளும், வீடியோக்களும்தான் அதிக அளவில் இடம்பெற்றுவருகின்றன. டிக்டாக் செயலியில் 90 சதவிகிதம் அஜித் ரசிகர்களின் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற மாநகரங்களில் அஜித் ரசிகர்கள் பிரமாண்ட கட்-அவுட், பேனர்கள் வைத்துக்கொண்டாடிவருகிறார்கள்.

அஜித் கட் அவுட்

இந்நிலையில், நகரத்து ரசிகர்களுக்கு நாங்கள் இளைத்தவர்கள் இல்லை எனச் சொல்லும் வகையில், 120 அடி கட்- அவுட், ஊர்வலம் எனத் தெறிக்க விட்டுள்ளனர் வத்தலகுண்டு ரசிகர்கள். 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பரிமளம் திரையரங்கில், இன்று வெளியானது 'விஸ்வாசம்'. இந்தப் பகுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் இதை திருவிழா போல கொண்டாடிவருகிறார்கள். நகரங்களில் வைப்பதுபோல 120 அடியில் பிரமாண்டமான கட்- அவுட், பேனர்கள் எனத் தியேட்டரை அலங்கரித்துவிட்டார்கள். இன்று காலை, வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகில் திரண்ட அஜித் ரசிகர்கள், ஆழ்வார் அஜித் ரசிகர் மன்றத் தலைவர் மகாமுனி தலைமையில், மேளதாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அஜித் ரசிகர்கள் 

அப்போது, அந்த வழியாக வந்த பேருந்து ஒன்றில் அஜித் படம் வரையப்பட்டிருந்தது. பேருந்தை நிறுத்திய ரசிகர்கள், அஜித் படத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர். பிறகு,

அஜித் ரசிகர்கள் 

மேளதாளத்துடன் ஊர்வலமாகச் சென்றவர்கள், திரையரங்கு முன்பாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏராளமான ரசிகர்கள் ஊர்வலமாகச் சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பரிமளம் தியேட்டர் 400 இருக்கைகளைக் கொண்டது. காலைக் காட்சிக்கு 400 இருக்கைகளும் நிரம்பிய பிறகும்                      50-க்கு மேற்பட்டோர் அதே காட்சிக்கான முன்பதிவு டிக்கெட்டுடன் தியேட்டருக்கு வந்தனர். இதனால் அதிர்ச்சியான தியேட்டர் நிர்வாகம், கிழித்த டிக்கெட்டுகளை எடுத்து சோதித்தனர்.

அஜித் பட டிக்கெட்

அப்போது, சில டிக்கெட்டுகள் கலர் ஜெராக்ஸ் என்பதும், சில டிக்கெட்டுகள் போலியானவை என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியான தியேட்டர் நிர்வாகம், அடுத்த காட்சியில் இருந்து டிக்கெட்டுகளைக் கவனமாகப் பார்த்தது. ஒரிஜினல் டிக்கெட் போலவே போலியாக டிக்கெட் அச்சடித்து, ரசிகர்கள் தியேட்டருக்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க