`இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது!'‍- காங்கிரஸ் மீது ஜோதிமணி திடீர் பாய்ச்சல் | Jothimani against reservation bill of central government

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (11/01/2019)

கடைசி தொடர்பு:12:20 (11/01/2019)

`இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது!'‍- காங்கிரஸ் மீது ஜோதிமணி திடீர் பாய்ச்சல்

``உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் பத்து சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது" என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

ஜோதிமணி

இது சம்பந்தமாக, அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ``உயர்சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டுகால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல் சாசனத்துக்கு முரணானது. இம்முயற்சி இட ஒதுக்கீட்டுக் கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது.

காங்கிரஸை எதிர்க்கும் ஜோதிமணி

வருடத்துக்கு 8 லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்தப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கெனவே பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறமுடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.