ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு | Governmnet replaces 18 Places name in Chennai City

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (11/01/2019)

கடைசி தொடர்பு:18:28 (12/01/2019)

ஆங்கிலேயர் வைத்த 18 ஊர்களின் பெயர் மாற்றப்படுகிறது!- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தமிழ்மொழி வளர்ச்சித் துறையினருடன் சென்னை மாவட்ட ஆணையர் சண்முக சுந்தரம் நேற்று நடத்திய கூட்டத்தில் சென்னையிலுள்ள பதினெட்டு ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட இருப்பதாக முடிவு செய்திருக்கிறார். 

சென்னை


அதில், தண்டையார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, ஜல்லடியான்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய பேட்டைகள் ஆங்கிலத்தில் 'பேட்' என்று முடியும். இனி அப்படி இல்லாதது ஆங்கிலத்திலும் பேட்டை என்றே முடிவில் பயன்படுத்தப்படும் எனத் தீர்மானித்ததோடு அயனாவரம் அயன்புரம் எனவும், எக்மோர் எழும்பூர் எனவும் ட்ரிப்லிகேன் திருவல்லிக்கேணி எனவும் தி நகர் தியாகராய நகர் எனவும் ஆங்கிலத்தில் பயன்படுத்த இருப்பதாகக் கூட்டத்தில் முடிவாகி இருக்கிறது. 

திருவல்லிக்கேணி

தமிழ்மொழி வளர்ச்சித் துறையின் ஆய்வுப்படி தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களில் ஆங்கிலத்திலுள்ள தெருக்கள் ஊர்கள் ஆகியவற்றின் பெயர்கள் தமிழில் மாற்றப்பட இருக்கின்றன. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் இதற்கான பணிகள் தீவிரமடைந்து வருகிறது. ஆங்கிலேயேர்கள் இந்தியாவில் ஆட்சி செய்ததற்கு சாட்சியாக அவர்களின் பெயர்களை தாங்கி நிற்கும் சாலைகளும், தெருக்களும் இனி தமிழன் வீதிகளாக வீற்றிருக்கப் போகின்றன. காலம் கடந்த செயல்தான் என்றாலும் இது முழுதும் நடைமுறைப்படுத்துப்பட்டால் பெரிதும் பாராட்டுக்குரியதே.