வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (11/01/2019)

கடைசி தொடர்பு:17:48 (11/01/2019)

மூன்று மாசத்துக்குமுன்தான் வேலைக்குச் சேர்ந்தேன்.. அதற்குள் இப்படி நடந்துவிட்டது- கதறிய பெண்

பாதிக்கப்பட்ட பெண்

சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மூன்று மாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். 

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் காமாட்சி (பெயர் மாற்றம்) இவர், சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்துவந்தார். இவர், கடந்த 2-ம் தேதி ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், `நான், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிரஞ்சீவி, முதல் மாதம் எனக்கு சம்பளம் கொடுத்தார். அடுத்து இரண்டு மாதங்கள் அவர் எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை. அதைக் கேட்டபோது அவரின் பேச்சு, நடவடிக்கைகள் வேறுவிதமாக இருந்தது. மேலும், தன்னிடம் தவறாக அவர் நடக்க முயன்றார்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து புகார் கொடுத்த காமாட்சியிடம் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர்  பெண் கொடுத்த புகாரில் சிக்கிய சிரஞ்சீவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அவர், தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர்மல்க தெரிவித்தார். தொடர்ந்து உரிமையாளர் சிரஞ்சீவியை போலீஸார் தேடினர். அவரின் வீடு நீலாங்கரையில் உள்ளது. இதனால் அங்கு அவரை போலீஸார் தேடினர். போலீஸாரின் நீண்ட தேடுதல் வேட்டையில் சிரஞ்சீவி சிக்கினார். அவரிடம் போலீஸார் விசாரித்து அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்த காமாட்சியின் குடும்ப சூழ்நிலையைத் தெரிந்துகொண்ட சிரஞ்சீவி அவரிடம் நட்பாகப் பழகியுள்ளார். அதன்பிறகுதான் சிரஞ்சீவியின் நடவடிக்கைகள் காமாட்சிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேலையைவிட்டு நிற்க அவர் முடிவு செய்துள்ளார். ஆனால், சிரஞ்சீவி 2 மாதங்கள் சம்பளத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தியுள்ளார். சம்பளத்தைக் கேட்ட காமாட்சியிடம் சிரஞ்சீவியின் நடவடிக்கைகள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமாட்சி கொடுத்த புகாரின்பேரில் சிரஞ்சீவியை கைது செய்துள்ளோம். சிரஞ்சீவி குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது'' என்றனர்.

சிரஞ்சீவியிடம் கேட்டதற்கு, ``நான் எந்தவித தவறும் செய்யவில்லை. என் மீது புகார் கொடுத்த பெண்ணுக்கு சம்பள பாக்கி மட்டுமே இருந்தது. ஆனால், அவர் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். மேலும், பெண்ணின் அப்பா எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதுதொடர்பாக நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன். சட்டரீதியாக என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சந்திப்பேன்'' என்றார்.