3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை! - உயிருக்குப் போராடும் குழந்தைகள் | Mother commits suicide with 2 children near thittakudi

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (11/01/2019)

கடைசி தொடர்பு:18:35 (11/01/2019)

3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை! - உயிருக்குப் போராடும் குழந்தைகள்

திட்டக்குடி அருகே கணவன் இறந்த சோகத்தில் மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்துக்கொண்டார். மகன்  சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 2 குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை செய்துக்கொண்ட தாய் சத்யா

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அருளழகன் என்பவரின் மனைவி சத்யா (27).  அருளழகன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவன் இறந்ததிலிருந்தே சத்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அரளிவிதையை அரைத்து அவரும் சாப்பிட்டுவிட்டு தன் குழந்தைகள் காவியா (10), அட்சயா (5), அகிலன் (2) ஆகியோருக்குக் கொடுத்துள்ளார். இது குறித்து தகவலறிந்த உறவினர்கள் நான்கு பேரையும் மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

அங்கு சத்யா சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார். குழந்தைகள் காவியா, அட்சயா, அகிலன் ஆகியோரை மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் அகிலன் இறந்துள்ளார். மற்ற குழந்தைகள் காவியா, அட்சயா ஆகியோருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ராமநத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.