``இவ்வளவு குப்பைகளா, உங்க ஓனர் எங்கே?’’ - பங்க் ஊழியர்களிடம் அதிரடி காட்டிய பன்வாரிலால் | Tamilnadu governor banwarilal Purohit inspects various government plans and projects in sivaganga

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (11/01/2019)

கடைசி தொடர்பு:19:05 (11/01/2019)

``இவ்வளவு குப்பைகளா, உங்க ஓனர் எங்கே?’’ - பங்க் ஊழியர்களிடம் அதிரடி காட்டிய பன்வாரிலால்

சிவகங்கையில் இன்று அரசமரத்துக்கு கீழ் வேப்பிலை இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர் எனப் பொதுமக்கள் கமென்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆய்வு செய்யும் பன்வாரிலால்


சிவகங்கையில் தூய்மை பாரதம் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்து பொதுமக்களிடம், மாணவர்கள், வணிகர்கள் ஆகியோரிடம் தூய்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிப் பேசினார்.

தூய்மை இந்தியா திட்டத்தை, தமிழக ஆளுநர் ஊர் ஊராகச் சென்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார். இன்று சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், பூக்கடை வியாபாரிகளிடம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் ஊர் பெயர் சிவனையும் கங்கையையும் கொண்டது. ஆகையால் நகர் முழுவதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள சாலைகளில் நடந்து சென்றவர் பெட்ரோல் பங்க் உள்ளே நுழைந்தார். அங்கு டயர், பேப்பர் கப், பிளாஸ்டிக் பாட்டில் கிடந்ததைப் பார்த்து இந்தப் பங்க் ஓனர் எங்கே என்று கேட்டார்.

அங்குள்ள ஊழியர்கள், ஓனர் மதுரை சென்று விட்டதாகச் சொன்னதும், சிவகங்கை எஸ்.பி ஜெயசந்தினரன், இன்ஸ்பெக்டர் மோகன் அங்குள்ள ஊழியர்களை வேகப்படுத்தி அங்குள்ள குப்பைகளை அகற்றினார்கள். இதைத் தொடர்ந்து அன்னபூர்ணா ஹோட்டல், மளிகைக்கடை முதலாளிகளை அழைத்து உங்கள் ஊரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வியாபாரிகள் சங்கத்தின் மூலமாக விழிப்பு உணர்வு நோட்டீஸ் அச்சடித்து பொதுமக்களிடம் வழங்க வேண்டும் என்றார். இதுவரை பஸ் ஸ்டாண்ட் கழிப்பறைகள் சுத்தம் செய்வதே இல்லை. அந்த இடம் நோய்களைப் பரப்பும் இடமாகவே இருந்திருக்கிறது. ஆளுநர் வருகிறார் என்பதற்காக நகராட்சி நிர்வாகம் அனைத்து கழிப்பறைகள் அனைத்தும் நறுமணத்துடன் சுத்தம் செய்து வைத்திருந்தார்கள். ஆனால், ஆளுநர் அங்கே செல்லவில்லை. பெண்கள் கழிப்பறை சுத்தம் செய்து கதவுகள் பூட்டப்பட்டிருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க