`கல்லூரி வாசலில் ஏன் தீ வைக்கிறாங்கன்னே தெரியல!’ - புலம்பும் மாணவர்கள் | Kumarapalayam arts college students plans to protest over pollution

வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (11/01/2019)

கடைசி தொடர்பு:21:09 (11/01/2019)

`கல்லூரி வாசலில் ஏன் தீ வைக்கிறாங்கன்னே தெரியல!’ - புலம்பும் மாணவர்கள்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு வெளியில் குப்பைக்குத் தீ வைப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

தீ

நாமக்கல் மாவட்டம் அருகே குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் குப்பைகளைச் சேகரித்துகொண்டு வந்து கொட்டித் தீ வைத்துச் செல்கின்றனர் பஞ்சாயத்து பணியாளர்கள். இதனால் அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களாகவே இதுபோல் அடிக்கடி யார் யாரோ தீ வைத்துவிட்டும், குப்பைகளைக் கொட்டிவிட்டும் செல்கின்றனர். நிறைய முறை குப்பைகளை அகற்றினாலும் மறுபடியும் மறுபடியும் நிறைய பேர் குப்பைகளைக் கொட்டிவிட்டு போறாங்க. காலையில் நெருப்பு வைத்தால் அடுத்த நாள் முழுவதும் புகைந்துகொன்டே இருக்கிறது. அதுமட்டும் இல்லாம குப்பைகளை எரிச்சுட்டு போறாங்க. இதனால அடிக்கடி விபத்தும் நடந்துட்டு இருக்கு. இதை முதல்ல தடுக்கணும் என்று மாணவர்கள் கூறினர்.

இதுகுறித்து பஞ்சாயத்து பணியாளர்களிடம் `உங்களை யார் நெருப்பு வைக்க சொன்னது’ என்று கேட்டால், அவர்கள் பஞ்சாயத்து ஊழியர்கள்தான் தீ வைக்கச் சொல்வதாகக் கூறுகின்றனர். மாசுக் கட்டுபாட்டுவாரிய அதிகாரிகள் அலுவலகமும் இதன் அருகிலேயே இருப்பதுதான் கொடுமை. இதைக் கண்டுகொள்ளாத மாசுக் கட்டுபாட்டு அதிகாரியும், நகராட்சி ஆணையாளரையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க