வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (12/01/2019)

கடைசி தொடர்பு:11:34 (12/01/2019)

‘பொங்கல் பரிசு’ - குமாரபாளையத்தில் ரேஷன் கடையில் தி.மு.க-வினர் வாக்குவாதம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரேஷன் கடையில் அ.தி.மு.க-வினருடன் தி.மு.க-வினர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடை

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த வாரம் முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹ 1000 பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி வரும் சூழ்நிலையில் நேற்று குமாரபாளையத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தி.மு.க-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நம்மிடம்  பேசிய தி.மு.க-வினர், ``அரசு வழங்கும் திட்டத்தில் அ.தி.மு.க அரசு வழங்கும் பரிசுப்பொருள் என்று எழுதியுள்ளார்கள். அவர்கள் கட்சிக்கொடியின் கலரான கறுப்பு, வெள்ளை, சிவப்பு மூவர்ண கலரில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இது தொடர்ந்தால் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர். தி.மு.க-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட  நேரத்தில் அந்த பேனர்கள் எடுக்கப்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடை சாத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க