தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக பொறுப்புக் கழகத்தின் புதிய தலைவராக ராமச்சந்திரன் பொறுப்பேற்பு! | Ramachandran takes charge Thoothukudi voc port trust's new chairman

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (13/01/2019)

கடைசி தொடர்பு:00:30 (13/01/2019)

தூத்துக்குடி வ.உ.சி., துறைமுக பொறுப்புக் கழகத்தின் புதிய தலைவராக ராமச்சந்திரன் பொறுப்பேற்பு!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் புதிய தலைவராக ராமச்சந்திரன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

ராமச்சந்திரன்

இந்தியத் துறைமுகங்களில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இரண்டு சரக்குப் பெட்டக தளம் உட்பட 14 கப்பல் தளத்துடன் செயல்பட்டு  வருகிறது. கையாளுதல், நிலக்கரி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தின் நுழைவு வாயிலாம் இத்துறைமுகத்தில் சரக்குத்தளம் ஆழப்படுத்தப்பட்ட பிறகு பெரிய நீளமான கப்பல்களின் வருகையும் அதிகரித்துள்ளது. 14 மிதவை ஆழம் கொண்ட பெரிய கப்பல்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகம்

இந்தத் துறைமுக பொறுப்புக் கழகத்தின் புதிய தலைவராக, இந்து அறநிலையத்துறையின் ஆணையராக இருந்த, ராமச்சந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், கடந்த,  1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில்  தேர்ச்சி பெற்ற இவர்,  ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். தமிழக நெஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்களின் செயலாளராகவும்,  தமிழக தகவல் தொழில் நுட்பத் துறையின்  முக்கிய செயலாளராகவும், செய்தி மற்றும் ஆவணங்கள் துறையின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

தொழில் நுட்பத்தில் இளங்கலைப் பட்டமும்,  தொழில்நுட்ப கணினி அறிவியிலில்  முதுகலைப்பட்டமும்  பெற்ற இவர், பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக்கொள்கையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். கர்நாடக இசையில் ஆர்வம் உள்ள,  ராமச்சந்திரன், இந்திய மற்றும் தமிழக அரசின் பல விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த  2017 ம் ஆண்டிலிருந்து, பொறுப்புத் தலைவர்களாக, ஜெயக்குமார், ரிங்கேஷ் ராய் ஆகியோர் பணியாற்றி வந்த நிலையில், புதிய தலைவராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க