’யாராலும் உண்மையை மறைக்க முடியாது; கொடநாடு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்!’- திவாகரன் அதிரடி | Dhivakaran Speak about Kodanadu estate murder Case issue

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (13/01/2019)

கடைசி தொடர்பு:01:30 (13/01/2019)

’யாராலும் உண்மையை மறைக்க முடியாது; கொடநாடு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்!’- திவாகரன் அதிரடி

திவாகரன்

கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த  அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன்,  "கோடநாடு கொலை வழக்கில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக வந்துள்ள குற்றச்சாட்டை நான் முழுமையாக பார்க்கவில்லை.  தெகல்கா எதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதனை நிரூபிக்க வேண்டிய கடமை அந்த ஊடகத்திற்கு உள்ளது. 

எத்தனை சக்தி வாய்ந்த மனிதர்களாக இருந்தாலும்,  உண்மையை மறைக்க முடியாது.  இந்தியாவில் குற்றம் செய்த எத்தனையோ முதல்வர்கள் சிறையில் இருந்திருக்கின்றனர். கோடநாடு கொலை வழக்கு  தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்துவிட்டதால், அந்த வழக்கு  முடிந்துவிட்டது.

இந்த விவகாரத்தில் தற்போது  முதல்வர், துணை முதல்வர் மற்றும் டி.டி.வி தினகரன் பெயர்கள் அடிபடுவதால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.எல்லாவற்றுக்கும் உடனடியாக பதில் அளிகும் தினகரன்  இந்த விவகாரத்தில் பதில் அளிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா  இறப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே  அவரது உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. எனவே அவர் இறப்பில் எந்த மர்மமும் இல்லை. சிலரின்  அரசியல் ஆசைகளால்தான் ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு பிரச்னைகள் எழுந்து  அ.தி.மு.க மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அங்கு இருந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள்,  எம்.எல்.ஏகள் அரசு அதிகாரிகள் என அனைவரும் தான் அப்பல்லோவில் சாப்பிட்டனர், அதனால்  உணவு கட்டணம் அதிகரித்தது. தற்போது  இது தொடர்பாக தரங்கெட்ட  பேச்சைப் பேச கூடாது. இப்போது சசிகலாவை  குற்றம்சாட்டுபவர்கள் சசிகலாவை  பொது செயலாளரை தேர்ந்தெடுத்த போது என்ன செய்தனர்? 

அமைச்சர்கள்  அ.தி.மு.க-வை  இணைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், முறையான ஒருங்கிணைப்பு வேலை நடைபெறவில்லை. பொத்தாம் பொதுவாக  அழைப்பு என்ற பெயரில்  கூப்பாடு போடுகிறார்கள். இது வெத்து அழைப்பு எனத் தெரிவித்தார்.  பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக  அ.தி.மு.க இணைவதற்கு  வாய்ப்பு இருக்கிறது. அதற்கான வேலைகளை ஓ.பி.எஸ் முன்னெடுக்கவில்லை. கட்சியை இணைக்க அழைப்பு விடுத்தால் எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க