வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (13/01/2019)

கடைசி தொடர்பு:02:30 (13/01/2019)

விவேகானந்தர் 156-வது ஜெயந்தி - கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் இசை நிகழ்ச்சி

சுவாமி விவேகானந்தர் 156- வது பிறந்த தினத்தை முன்னிடு கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு பாறையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் இசை நிகழ்ச்சி நடந்தது.

விவேகானந்தர்


சுவாமி விவேகானந்தர் 156 வது ஆண்டு பிறந்த தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் இசை  நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமான நாகபுரியில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சீருடை அணிந்து பேண்ட் வாத்யம் முழங்க கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் இருந்து அணிவகுப்பு ஊர்வலமாக சென்றனர்.

இசை நிகழ்ச்சி

பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் சென்றனர். அங்கு சுமார் ஒரு மணி நேரம் பேண்ட் வாத்தியங்கள் முழங்க இசை நிகழ்ச்சி நடத்தினர். இதில் ஆர்.எஸ்.எஸ். தேசிய உடற்பயிற்சியாளர் சுனில் குல்கர்ணி மற்றும் இசை அமைப்பாளர் பரத்வாஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.