கால்பந்து விளையாடி போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சர்! | Minister Rajendra Balaji plays football in Rajapalayam

வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (13/01/2019)

கடைசி தொடர்பு:23:54 (13/01/2019)

கால்பந்து விளையாடி போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சர்!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ராஜபாளையத்தில் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது உற்சாகமிகுதியில் தானும் களத்தில் இறங்கி சிறிது நேரம் கால்பந்து விளையாடினார். இதனால் போட்டிக்கு வந்திருத்த இளைஞர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

Minister

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``வேலூரில் ஆவின்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்ற புகார் தொடர்பாக ஆவின் மேலாளரிடம் தகவல் தெரிவித்து உடனடியாக அந்த பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு இதுவரை எந்த பாக்கியும் வைக்கவில்லை. ஊழியர்கள் யாருக்கும் சம்பள பாக்கி வைக்கவில்லை.

Minister

தற்போது தேர்தல் நெருங்குவதால் திமுக தலைவர் ஸ்டாலின்  கிராமசபை கூட்டம் நடத்தி வருகிறார். ஆனால் நாங்கள் நகர சபை கூட்டம் நடத்தி  வருகிறோம்.

Minister

கொடநாடு கொலை சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். மேலும், அந்த வழக்கை சட்டரீதியாக சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கொலை குறித்து கூலிப்படையினர் சொல்வதற்கெல்லாம் பதில் கூற முடியாது’’ என தெரிவித்தார்.